Sunday, May 15, 2011

39 ஏன் ஜோடி மஞ்சக்குருவி



சின்னதம்பி பெரியதம்பி இந்த நிகழ்ச்சி வானொலியில் ஒரு காலத்தில் காலை நேரங்களில் பிரபலாமாக இருந்தது இதில் பிரபலமான கதாபாத்திரங்கள் பெரியதம்பியாக அறிவிப்பாளர் திரு.கோபாலகிருஷ்னன் அவர்களும் சின்னதம்பியாக அறிவிப்பாளர் திரு;சுரேந்தர் ஆகியோர் ரொம்ப பிரபலமாக இருந்தார்கள். இவர்களின் கூட்டணி பிரிந்ததும் இந்த நிகழ்ச்சி பொலிவு இழந்து விட்டது. அப்போது தொடர்ந்து கேட்ட நிகழ்ச்சி நான் ஒரு வித்தியாசத்திற்க்காக
சமீபத்தில் இதை கேட்டேன் பெரியதம்பியாக கோபாலகிருஷ்னன சார் மட்டும் இருந்தார் மற்ற நண்பர்கள் சின்னதம்பியாக என்னதான் முயற்சி செய்து பேசினாலும் திரு.சுரேந்தரின் இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனாலே மானேஜர் மாதவன் நீலாம்பரி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இருந்தாலும் ஒரு வித்தியாசத்திற்க்காக இரண்டு பாடல்களூடன் சின்னதம்பி பெரியதம்பி நிகழ்ச்சியை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

1. ஏன் ஜோடி மஞ்சக்குருவி
2.நல்லாவ புட்டு வெச்சே மத்தியல பொட்டு

Get this widget | Track details | eSnips Social DNA

No comments: