Tuesday, May 31, 2011

48 மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி


மேனேஜர் மாதவனுக்கு அஞ்சலி புஷ்பாஞ்சலி

Get this widget | Track details | eSnips Social DNA


சில காரணங்களாக சென்ற ஒரு வாரகாலாமாக வானொலியில் மானேஜர் மாத்வன், நீலாம்பரி கூட்டு நிகழ்ச்சி கேட்க முடியவில்லை. ஆகையால் பதிவுகளையும் இந்த தளத்தில் பதிய முடியவில்லை. இந்த இடைபட்ட காலத்தில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த தளத்தின் ஆணிவேரானா மேனேஜர் மாதவன் அவர்கள் இயற்கை எய்தினார் என்பது தான் அது. நேற்று என்னுடையை அஞ்சலி புஷ்பாஞ்சலி பதிவிற்க்கு ஒரு மறுமொழி வந்தது சு.கி.ஞானம் என்ற பதிவாளர் அனுப்பியிருந்தார் எனக்கு மின்னஞ்சல் தகவலும் வந்தது அவர் தங்கிலீஸில் எழுதியிருந்ததால் முதலில் படித்ததும் ஒன்றுமே புரியவில்லை. மானேஜர் மாதவன் அவர்கள் மறைந்த நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேல் அவர்களின் புதல்வர் என்று நண்பர்க்ள் மூலமாக கேள்விபட்டேன். அதை பற்றி விசயங்கள் தெரிந்து கொள்ள சிலமாதங்கள் முன் அவருக்கு தனியாக மின்னஞ்சலும் செய்தேன் பதில் இல்லை.

மறுமொழி கொடுத்த அன்பரிடம் விவரங்களூம் கேட்டு எழுதினேன். நேற்று மதியம் மறுபடியும் இந்த நிகழ்ச்சி கேட்கும் போது துவக்கத்தில் மானேஜர் மாதவன் அவர்களூக்கு நீலாம்பரி, அசிஸ்டெண்ட் மேனேஜர், வைஷ்னவி மற்றும் தமிழ்செல்வி ஆகியோர் அஞ்சலியாக தெரிவித்ததும் தான் எனக்கு தெரிந்தது. மாதவன் அவரின் குரலுக்காகவும்
அவரின் நிகழ்ச்சியால் வெகுவாக ஈர்க்கப்பட்டு தனியாக அவருக்கு தளம் அமைத்தேன். இணையதளத்தில் இவரின் நிகழ்ச்சிகள் பலவிதமாக விமர்சனங்களை தந்திருந்தாலும். ஒரு ரிலாக்ஸுக்காக இந்த நிகழ்ச்சியை கேட்பவர்கள் பலபேர். அவர்களில் நானும் ஒருவன்.

இன்று இந்த ஒலித்தொகுப்பில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்றைய ஒலிபரப்பிய தொகுப்பை உங்களூக்காக வழங்குகிறேன். இந்த தொகுப்பில் பாடல்கள் இருக்காது. வசணங்களூம் வழக்கமாக வரும் பிட் பாடல்களும் தான் இருக்கும். என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தொகுப்பில் நீலாமபரி மேடம் சொன்னது போல் மானேஜர் மாதவன் எல்லோரின் இதயத்திலும் நீஙகா நினைவுகளாக் நிறைந்து இருக்கிறார் அது தான் உண்மை. இனிமேலும் அவரின் நிகழ்ச்சி பதிவுகளை ஒலிபரப்புவார்கள் என்று கருதுகிறேன். அதுமட்டுமல்லாமல்
என்னிடம் இருக்கும் பதிவுகளையும் நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றாக பதிய உள்ளேன்.

அவரின் ஆன்மா சாந்தியடைய இணையதள நேயர்கள் சார்பாக இறைவனை வேண்டுகிறேன். அத்துடன் அவரின் பிரிவால் வாடும் அவர் தம் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஊசிக்குறிப்பு: இனிமேல் என்னிடம் இருக்கும் நிகழ்ச்சிகளில் மாதவன் அவர்களின் சம்பாஷனைகளை மட்டும் பதியலாம் இருக்கிறேன். தொடர்ந்து வரும் படப்பாடல்கள் தேவையில்லை என்று நினைக்கிறேன். தங்களின் கருத்துக்களை மறுமொழியாக தெரிவிக்கலாம்.

பதிவிறக்கம் இங்கே

3 comments:

தமிழ்த்தோட்டம் said...

ஆழ்ந்த இரங்கலையும், அவரது ஆன்மா சாந்தி அடையவும் பிராத்தனை செய்கிறோம்.

தமிழ்த்தோட்டம்

நிலாமதி said...

ஆழ்ந்த் இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்க என்பிரார்த் தனை களையும் தெரிவிக்கிறேன்.

ஆரணி said...

இதென்ன இது? திடீரென இப்படியொரு பதிவு, என்னால் நம்பவே முடியவில்லை. இப்போ கொஞ்ச நாளாகத்தானே அவரின் ஒலித்தொகுப்பைக் கேட்கத் தொடங்கினோம்..... முளையிலேயே கருகிவிட்டதே.

அவர் வயதானவரா? அல்லது எதிர்பாராதா நோயினால் மரணமோ? குரலைப் பார்த்து வயதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

எதுவாயினும் அவரது ஆத்மா அமைதியடையட்டும், அதேநேரம் அவரின் குடும்பத்தாருக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஊசிக்குறிப்புக்கு பின்குறிப்பு:
சில பாடல்களையும் அப்பப்போ பகிர்ந்துகொண்டால் நல்லதென்பது என் எண்ணம்.

ஆரணி,